×

ஆரி ஜோடியானார் தீப்ஷிகா

சென்னை: மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குனர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், ஆரி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரிலீஸ்’. பூஜையுடன் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. சென்னையில் ஒரு அபார்ட்மெண்டுக்குள், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் மையம். மொத்தக் கதையும் ஒரு அபார்ட்மெண்டின் உள்ளேயே நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை இருக்கும் என சுந்தரபாண்டி தெரிவித்தார். தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜே. லக்ஷ்மன், இசை: எஸ். சங்கர் ராம். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

The post ஆரி ஜோடியானார் தீப்ஷிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aary ,Deepshika ,Chennai ,Raja ,Mano ,Creation ,Sundarapandi ,Aari ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...